200 விக்கெட் வீழ்த்திய பும்ரா.. டெஸ்ட் வரலாற்றிலேயே இல்லாத குறைவான சராசரி!

vinoth
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (12:35 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் மெல்போர்ன் டெஸ்ட்டில் அவர் 8 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவரது சராசரி 19.45 என்ற அளவில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்கள் எட்டிய எந்த பவுலரும் சராசரி 20 ரன்களுக்குக் குறைவாக வைத்திருந்ததில்லை. இதன் மூலம் ஒரு புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார்.  44 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்