நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி 12 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்தது.
இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகையாக சுமார் 58 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. இந்தத் தொகையை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் இதர ஊழியர்கள் பிரித்தெடுத்துக் கொள்ள உள்ளனர்.
ஆனால் தொடரை நடத்திய வகையில் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு மதிப்பில் சுமார் 869 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு நஷ்ட ஈடாக ஐசிசி வெறும் 52 கோடி ரூபாய்தான் அளித்துள்ளது. இதனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.