பாபர் அசாம் மிகப்பெரிய ஜீரோவாக இருக்கிறார்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

புதன், 21 டிசம்பர் 2022 (09:21 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளையும் தோற்றது.

டெஸ்ட் போட்டி விளையாடும் அனுகுமுறையையே மாற்றியுள்ளது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளையும் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வொயிட்வாஷ் ஆனதே இல்லை.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் டேனிஷ் கனேரியா கேப்டனாக பாபர் ஆசாம் ஜீரோவாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “அசாமை கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடமுடியாது. அவர்கள் பெரிய வீரர்கள். அவர்களோடு ஒப்பிட பாகிஸ்தான் அணியில் ஆளே இல்லை. இந்த தொடரிலேயே கேப்டன்சி பற்றி அவர் மெக்கல்லம் மற்றும் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கலாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய கருப்புப் புள்ளியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்