சீனாவில் 90 நாட்களில் 87 கோடிப் பேருக்கு கொரொனா பரவும்- நிபுணர்கள் எச்சரிக்கை
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:08 IST)
சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.
இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
தற்போது உலகில் கொரொனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், சீனாவில் கடன்டஹ் ஒன்றரை மாதங்களாக கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பெய்ஜிங்கில் தினமும் 2000 சடலங்கள் புதைப்படுவதாகவும், அடுத்த 90 நாட்களில் சுமார் 87 கோடிப் பேருக்கு கொரொனா பரவல் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.