6 விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆஸி.. பும்ரா, சிராஜ் அபாரம்!

vinoth
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (09:39 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நான்காவது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தின் மூலம் 474 ரன்கள் சேர்த்தது.  பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை பாலோ ஆன் தவிர்க்க வைத்து 369 ரன்கள் சேர்க்க வைத்தனர். சிறப்பாக ஆடிய நிதீஷ் குமார் 114 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸி அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் தற்போது ஆஸி அணி 6 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் லபுஷான் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஆடி வருகின்றனர். ஆஸி அணி 235 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்