ஆசிய கோப்பை :ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (22:57 IST)
ஆசிய கோப்பை இறுதிக்கட்டத்தை  நெருங்கியுள்ள நிலையில், இன்றைய சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தானை, இந்தியா  வீழ்த்தி 101ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய போட்டியில் மொகமத் நாமி தலைமையிலான ஆஃப்கான் அணியை கே.ஏல்.ராகுல்  தலைமையிலான இந்திய அணி எதிர்கொண்து. ஆஃப்கான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

எனவே முதலி இந்தியா பேட்டிங் செய்கிறது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 எனவே, ராகுல் 62 ரன் களும், விராட் கோலி 122 ரன் களும், யாதவ் 6 ரன்களும், பாண்ட் 20 ரன் களும் அடித்தனர். எனவே இந்திய அணி  2 விக்கெட்டுகள் இழப்பிற்கு  212 ரன்  அடித்து ஆஃப்கானுக்கு213 என்ற  இமாலய இலக்கு நிரணயித்துள்ளது.

ஆஃப்கான் சார்பில் அஹமது மட்டும் 2  விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து  பேட்டிங் செய்த, ஆப்கானிஸ்தானில்,ஷாற்றான் 64 ரன்களும், முஜீப் 18 ரன்களும், ரஷீத் கான் 15 ரன்களும் அடித்தனர்.  எனவே 20 ஓவர்கள் முடிவில் 111 ரன் களுக்கு 8 விக்கெட் இழ்ந்து தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பில், புவனேஷ்வர் 5 விக்கெட்டும், ஹூடா 1 விக்கெட்டும், சிங் 1 விக்கெட்டும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்