''சிங்க கர்ஜனை''....3 ஆண்டுகளுக்குப் பின் அபார சதம் அடித்த கோலி!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (21:27 IST)
3 ஆண்டுகளுக்குப் பின் இந்திய வீரர் கோலி சதம் அடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் பிரபல வீரர்களாக இருந்தவர்கள் யாரும் வெற்றிகரமான கேப்டன்களாக ஜொலித்தது இல்லை. இதற்கு விதிவிதிக்காக கபில்தேவ், கவாஸ்கர், கங்குலி, தோனி, வரிசையில் விராட் கோலியும் இடம்பிடித்தார்.

ஆனால், உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதில் இருந்து விராட் கோலி மீது கடும் விமர்ஸனம் எழுந்தது. இதையடுத்து ஒவ்வொரு போட்டியில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பின்னும், அவரால் முன்பை போல தொடர்ந்து ஃபார்மில் ஜொலிக்க முடியவில்லை.

அவர் மீது முன்னாள் கேப்டன் களும், பயிற்சியாளர்களும் ஏன் பிற நாட்டு வீரர்கள் கூற விமர்சித்தனர்.

இந்த நிலையில் விராட் கேப்டனாக இருந்தபோது, ரோஹித்திற்கு வாய்ப்பு கொடுத்ததுபோல் அவர் கேப்டனாக இருக்கையில் விராட் பார்முக்கு வர வாய்ப்பு கொடுத்தார்.

அதை கோலி வீணாக்கவில்லை. இந்த நிலையில், ஆசிய கோப்பையில், மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி, கடந்த போட்ட்டிக்கு முன் அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் டக் அவுட் ஆன நிலையில், இப்போட்டியில், சதம் அடித்துள்ளார்.

1021 நாட்கள் அதாவது 3 ஆண்டுகளுக்குப்( 2 ஆண்டுகள் 9 மாதம் 16 நாட்கள்)  பின் சதம் அடித்த மகிழ்ச்சி அவர் முகத்தில் இன்று தவழ்ந்தது.

53 பந்துகளில் 100 ரன் கள் அடித்த அவரின் 71 வது சதம் இதுவாகும். இப்போட்டியில் 61 பந்துகளில் அவர் 122 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே நிலை நீடித்தால் மீண்டும் அவர் கேப்டன் பதவியில் அமரவும் வாய்ப்புள்ளது. இந்திய அணியும் அவரது தலைமையில் உலகக் கிரிக்கெட்டில் வலிமையுடன் வலம் வரலாம்.

மேலும், விராட் கோலி டி-2- கிரிக்கெட் போட்டியில் 3500 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனைப்படைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்