காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.
இந்த தாக்குதலால் இரு நாட்டுக்கும் இடையே போர் வந்துவிடுமோ என்று பலரும் அச்சப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் தாக்குதலைத் தொடங்க, இந்திய ராணுவமும் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டி போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களால் இரு நாடுகளிலுமே பதற்றமான சூழ்ல் நிலவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் “கண்ணுக்குக் கண் என்ற பழிவாங்கும் நடவடிக்கை, உலகையே பார்வையற்றதாக்கிவிடும்” எனப் பதிவிட்டுள்ளார்.