ரம்ஜான் கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீர்ர்கள்

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (16:19 IST)
கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி அனுமதி வழங்கியது.



இதையடுத்து தங்களது முதல் டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் அணியினர் இந்தியாவுடன் பெங்களூரில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியினர் இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.




இந்த நிலையில் இன்று ரம்ஜான் காரணமாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடினர். இது குறித்த புகைப்படங்களை பிசிசிஐ தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்