எனவே, வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டினார். ஆனால், தற்போது கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதற்கு அவரே மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆம், ரமலான் மாதத்தில் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவரது டிவிட்டில், வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள் என பதிவிட்டுள்ளார்.