தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
ஏலியன்ஸ் என்றும் 360 டிகிரி என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ். தற்போது நடைபெற்று வரும் 9ஆவது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார்.
இந்த ஐபிஎல் போட்டிகளில் 11 இன்னிங்ஸில் விளையாடி 4 அரைச்சதங்கள், ஒரு சதம் உட்பட 538 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு அணியின் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் நாக்ஸ், ‘பல நேரங்களை இந்தியாவில் கழித்துள்ள நீங்கள், ஏன் இந்திய குடியுரிமையை பெற்றுக்கொள்ளக் கூடாது?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு அதிரடி டி வில்லியர்ஸ், “இந்திய குடியுரிமையை பெறுவது குறித்து இந்திய பிரதமர் மோடியிடம் பேசவேண்டும்” என்று கூறியுள்ளார்.
டி வில்லியர்ஸ் நகைச்சுவையாக இதை கூறியிருந்தாலும், இது பெரும்பாலான இந்திய வீரர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.