ஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்ன...?

Webdunia
பிரசவம் முடிந்து குழந்தை பிறந்துவிட்டால் போதும் என்று நினைப்போம், ஆனால் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. 

குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர  எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள  வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும்  என்பதைப் படித்து தெரிந்து கொள்வோம்.
 
0 முதல் 4 மாதங்கள்: பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
 
4 முதல் 6 மாதங்கள்: நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று  தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு  மசித்து கொடுக்க வேண்டும். அதனுடன் தாய்ப்பால் கொடுத்து வருவதும் அவசியம்.
 
6 மாதங்கள் 8 வரை: இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள்,  பருப்பு வகைகள், முட்டை போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அலர்ஜி வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த  உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர்த்து மற்றவற்றை கொடுக்கலாம்.
 
8 முதல் 10 மாதங்கள்: இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும்  கொடுக்க ஆரம்பிக்கலாம்.
 
10 முதல் 12 மாதங்கள்: இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்