குழந்தைகளின் பற்கள் வளர்ச்சியில் ஏற்படுகிற மாற்றங்கள் என்ன...?

Webdunia
பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் கொஞ்சம் அதி தீவிரமாகவும்  செயல்படுவார்கள்.
குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும். 
 
தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன. பற்கள் வருவதன் அறிகுறிகள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல் போன்ற  அறிகுறிகள்.
 
ஈறின் உள்பகுதியில் உள்ள எம்பிரியானிக் செல்களில் இருந்து பற்கள் தோன்றி, ஈறினைத் துளைத்து வெளிவருகிறது. முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும். இவை நரம்பு கிளைகளின் வேர்களைப் பிடித்துக் கொண்டு வளருகின்றன. பல் முளைக்கும்  நிலையானது 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வெளியே வருகின்றன.
 
குழந்தை பருவத்தில் ஒவ்வொரு 6 மாத இடைவேளியில், குறைந்தது 4 பற்கள் முளைக்கின்றன. பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல்  புறமாக வளரும். 8 மாதம் - 6 வயது வரை, பற்கள் வேகமாக வளருகின்றன. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு பற்கள்  விரைவாகத் தோன்றி, விரைவாக வளர்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்