சாண எரு, ஆட்டு கழிவு, முட்டை ஓடு, மீன் தொட்டி நீர், வெங்காயம், பூண்டு இவற்றின் தோல்கள் என அனைத்தையும் உங்கள் தோட்டங்களில் பயன் படுத்தலாம்.
இலைகளில் தோன்றும் பூச்சி, புழுக்கலுக்கு மஞ்சள் கலந்த நீரை தெளிக்கலாம். வேர்பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு, வேப்பிலைகளை பயன்படுத்துவதன் மூலம் செடிகளை பாதுகாக்க முடியும்.
உங்கள் வீட்டு சமையலறை கழிவுகளை உரமாக மாற்றி தோட்டங்களில் பயன்படுத்தலாம். முதலில் இரண்டு குப்பைத் தொட்டிகளை தயார் செய்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தொட்டியில் கொட்டவேண்டும். அவற்றை மக்கவைத்து உரமாகப் பயன்படுத்தலாம்.
மீன் கழிவைக்கூட பிளாஸ்டிக் தொட்டியில் வெல்லம் சேர்த்து வைக்கும்போது நாற்றமே இல்லாத உரமாக மாறிவிடும். அதே போன்று மீன் தொட்டிகளில் உள்ள நீரை மாற்றும்போது அந்த கழிவு நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம். அதே போன்று அரிசி, பருப்பு, சிறு தானியங்கள் களைந்த நீரை தாவரங்களுக்கு செலுத்தலாம்.