பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் சாப்பிடவேண்டிய உணவுகள் எவை தெரியுமா...?

Webdunia
சிறு குழந்தைகளை கவனிப்பது என்பது ஒரு சவாலான விஷயம். குழந்தைக்கு அடிக்கடி தேவைக்கேற்ப பால் கொடுக்க வேண்டும். தூக்கமும் பால் கொடுப்பதும் குழந்தைக்கு மிக முக்கியம். இந்த இரண்டில்தான் குழந்தையின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது. 
அரை மணி நேரம் கிடைத்தால்கூட அந்த நேரத்தில் ஓய்வு எடுத்துகொள்ளுங்கள். நீங்கள் சரியாக சாப்பிட்டால்தான் குழந்தைக்கும் தாய்ப்பால் மூலம் ஊட்டமளிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
 
மிதமான நடைப்பயிற்சி, மூச்சு பயிற்சி, மிதமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். சிசேரியன் செய்தவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி  பின்பற்றுவது நல்லது.
 
கை, முகம், மார்பகங்கள் அனைத்தும் சுத்தமாக பராமரித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை பால் கொடுத்த பிறகு மார்பகங்களை  சுத்தப்படுத்துங்கள்.
 
தண்ணீரைத் தேவையான அளவு குடிப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், இளநீர், நீர் மோர் எனச் சாப்பிடுவது நல்லது. கீரைகள்,  சிறுதானியங்கள், மீன், முட்டை, காய்கறிகள், பருப்பு-பயறு வகைகள் போன்றவற்றை அவசியம்.
பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும். கல்யாண முருங்கை  இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம்.
 
மீன் வகைகளைத் தவிர்த்து சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம்.
 
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து  கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும்.
 
குழந்தைகள் அழுவதும் வாந்தி எடுப்பதும் இயல்புதான். அதுபோல பேதி, வயிற்றுபோக்கும் இயல்பே. ஆனால், தொடர்ந்து இந்தப் பிரச்னை  இருந்தாலோ இயல்புக்கு மீறி இருந்தாலோ சுயமருத்துவம் செய்யாமல் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்