BUDGET 2022 - எதிர்பார்ப்புகள் என்னென்ன??

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:05 IST)
5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

 
இன்று மத்திய அரசின் 2022 - 2023க்கான ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகள் இன்னும்  ஒரு மணி நேரத்தில் வெளியாக உள்ளன.  இந்தியாவின் 75 வது பட்ஜெட்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட்டும் ஆன இந்த பட்ஜெட் கொரோனா காரணமாக 2வது முறையாக காதிதம் இல்லாத மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. 
 
தற்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவறில் சில பின்வருமாறு... 
 
* இரண்டரை லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோருக்கு அளிக்கப்பட்டு வரும் வருமான வரி விலக்கு 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு.
 
* மூத்த குடிமக்களுக்கான உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து மூன்றரை லட்சமாக அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. 
 
* அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மீதான மூலதன ஆதாய வரியை ரத்து செய்வது
 
* தோல் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற வேலை வாய்ப்பு மிகுந்த துறைகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் ஊக்கத் திட்டம் 

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்புகள் 
 
* கொரோனா பெருந்தொற்றலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சேவைத் துறையை மீட்க திட்டங்கள்
 
* இந்த ஆண்டு பட்ஜெட்டை ஒப்பிடுகையில், சுமார் 14 சதவிகிதம் அதிகரித்து 39. 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வாய்ப்பு
 
* சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவும் திட்டமிடலாம் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்