அமலாக்கத்துறை இயக்குனரின் பதவி நீட்டிப்பு குறித்த வழக்கில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்துள்ள சுப்ரீம் கோர்ட் இனிமேல் பணி நீட்டிப்பு செய்து மனு தாக்கல் செய்யக்கூடாது என கூறியுள்ளது.
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்கே மிஸ்ரா ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு பதவியில் இருக்க கூடாது என்றும் அவரது பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த மத்திய அரசு செப்டம்பர் மாதம் வரை பதவி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் எஸ்கே மிஸ்ரா தவிர வேறு அதிகாரிகளே அமலாக்கத்துறையில் இல்லையா என்றும் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்கே மிஸ்ராவுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் அவர் இயக்குனராக நீடிக்க கூடாது என்றும் பதவி நீட்டிப்பு கேட்டு மேலும் அனுதாக்கல் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது