இதையடுத்து அவரின் அடுத்த படமாக மாமன் மே 16 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தாய்மாமன் உறவை மையப்படுத்தி நெஞ்சைக் கசக்கி பிழியும் படமாக மாமன் இருந்தது. இந்த படம் சென்னையைத் தாண்டி நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதுவரை சூரி கதாநாயகனாக நடித்த எந்த படமும் வசூலில் தோல்வி அடைந்ததில்லை. இந்நிலையில் சூரி இனிமேல் தான் நடிக்கும் படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கவுள்ளாராம். சம்பளமாகப் பெறாமல் இனிமேல் இலாபத்தில் பங்கு என்ற விகிதத்தில் இனி அவர் சம்பளம் பெற உள்ளாராம். ஏற்கனவே அவரது படங்களை அவரது மேனேஜர் குமார் என்பவர்தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.