பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.
முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றி பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் மஞ்சு தெரிவித்துள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக “சமீபத்தில் நான் யாஷை சந்தித்தேன். அப்போது அவர் ராமாயணம் படம் 45 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் எனக் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.