இதெல்லாம் வெளில சொன்னால் வெட்கக்கேடு... சக நடிகைகளை தாக்கி பேசிய கங்கனா ரனாவத் !

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (14:02 IST)
சிவப்பழகு கிரீம்களை விளம்பரப்படுத்திவிட்டு நிறவெறி குறித்து கருத்து சொல்லும் நடிகைகளை  கங்கனா ரனாவத் வெளுத்து வாங்கியுள்ளார்.

அமரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின நபர் சாலையோரத்தில் வைத்து போலிஸாரால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் அதிகமாகியுள்ளது. இந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா மட்டுமில்லாது உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த வழக்கில் 4 போலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பல பிரபலங்களும் இன பாகுபாட்டுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இது குறித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பல்வேறு இந்திய நடிகர், நடிகைகள் சிவப்பழகு க்ரீம்களின் விளம்பரங்களில் நடித்துவிட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கோடி கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு தற்போது இனவெறியை கண்டித்து கறுப்பினத்தவர்களுக்கு குரல் கொடுக்கிறார்கள்.

அவ்வளவு ஏன் அவர்கள் நடிக்கும் படங்களில் சாதாரண ஒரு கதாபாத்திரத்துக்கு கூட கறுப்பான தோற்றம் கொண்டவராக நடிக்க மறுத்து விடுகின்றனர். நான் அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டவள் இதுவரை எந்த அழகு சார்ந்த விளம்பரத்திலும் நடித்ததில்லை. என நியமாக பேசியுள்ளார். இவர் தற்போது தலைவி படத்தில் மறைந்த முதல் ஜெயலலிதாவின் கதாபத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்