HBD கத்ரீனா கைஃப் - வாழ்த்தும் நட்சத்திர நடிகர்கள்!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (11:28 IST)
பாலிவுட் திரைத்துறையில் ஸ்டார் நடிகையாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். ஹாங்காங்கில் பிறந்த இவர் தனது 14 வயதில் விளம்பரம் ஒன்றில் நடித்து பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். 
 
கத்ரீனாவின் மாடலிங் பணியைப் பார்த்து ரசித்த இலண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட் அவரைத் திரைப்பட நட்சத்திரமாகக் கண்டெடுத்து தனது பூம் (2003) படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். இதன் பிறகு மும்பைக்கு இடம் பெயர்ந்த கேட்ரீனாவுக்கு ஏராளமான மாடலிங் வாய்ப்புகள் குவிந்தன. கூடவே அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக உருவெடுத்தார். 

இதையடுத்து பிரபல நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டு பிரபலமான காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். அந்த காதல் முறிந்துவிட தற்போது விக்கி கௌசலை காதலித்து டேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடும் கத்ரீனா கைஃப்பிறகு  நட்சத்திர நடிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்