வாழ்கையில் எப்போது வேண்டுமென்றாலும் எதும் நடக்கும்: சன்னி லியோன்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (16:10 IST)
2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுடில் அறிமுகமானார் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். தற்போது ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கும் ‘ரயீஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் ராகுல் தொலாக்கிய இயக்கி வருகிறார்.

 
இப்படத்தின் ‘லைலா ஓ லைலா’ என்ற பாட்டிற்கு நடிகை சன்னி லியோன் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். ரசிகர்களிடையே இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற சன்னியிடம் ஷாரூக்கானுடன் நடித்ததை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு ”நான் இதுவரை முன்னணி நடிகர்களுடன் நடித்தது இல்லை என்று பலர் கூறினர். இப்படத்தின் மூலம் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான், வாழ்கையில் எப்போது வேண்டுமென்றாலும் எதும் நடக்கும் என்பதுக்கு இது ஒரு எடுத்துகாட்டு, என்று கூறினார்.
 
அடுத்த கட்டுரையில்