பைரவாவோடு மோதும் கோடிட்ட இடங்களை நிரப்புக!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (15:29 IST)
பார்த்திபன் இயக்கி, தயாரிக்கும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இயக்குனர் பார்த்திபன் இப்படத்தின் வெளியீடு குறித்து அவ்வப்போது டுவிட்டரில் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே டிசம்பர் இறுதியில் வெளியாவதாக கூறப்பட்ட நிலையில், முதலில் 'தங்கலுக்கும் பொங்கலுக்கும் இடையே வருகிறோம்' என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். தற்போது, 'பொங்கலுக்கு விஜயம் செய்கிறோம்' என்று போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
 
சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்