செல்ல நாய்களுடன் சமத்து சமந்தா - கமெண்ட்ஸ் போட்டு கவனம் ஈர்த்த அனுஷ்கா சர்மா!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (11:29 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வந்த இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.  இதையடுத்து சமந்தா தனக்கு பிடித்த ரோல்களில் நடித்து வருவதோடு இஷ்டம் போல் சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது  தன் செல்ல நாய்களுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த போட்டோவுக்கு அனுஷ்கா சர்மா கமெண்ட்ஸ் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்