ஏழ்மையில் தவிக்கும் மக்களை மீட்க பணக்கார நாடுகள் முன்வர வேண்டும்

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (21:43 IST)
ஏழை நாடுகளில் உள்ள மக்களின் வறுமையைப் போக்க, பணக்கார நாடுகள் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
அதன்படி, குறைந்தபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ள 48 நாடுகளில், வறுமையில் தவிக்கும் மக்களை அதிலிருந்து மீட்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஐ.நாவின் துணை தலைமை செயலரான கயன் சந்திர ஆச்சார்யா, துருக்கியில் தொடங்கிய குறைந்தபட்ச வளர்ச்சியை கண்டுள்ள நாடுகளுக்கான கருத்தரங்கத்தின் போது, பிபிசி செய்தியாளரிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருமளவு குறைந்துவிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் ஆப்ரிக்க நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், உலகில் எவ்வளவு நெருக்கடியான நிலை ஏற்பட்டாலும் ஒரு பில்லியன் மக்களைக் கொண்ட அந்த நாடுகளை மறந்துவிடக்கூடாது என்றார் அவர்.
அடுத்த கட்டுரையில்