கோலி சாதனை: 500வது போட்டியில் சதம் - சச்சினுடன் ஒப்பிடும் புள்ளி விவரம் உணர்த்துவது என்ன?

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (21:33 IST)
கடந்த 5 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி, அதற்கு முறறுப்புள்ளி வைத்திருக்கிறார். அதுவும், சர்வதேச அளவில் 500-வது போட்டியில் ஆடும் போது சதம் அடித்ததன் மூலம் அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரை பல விதங்களிலும் அவர் முந்தியுள்ளார்.
 
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
 
'டாஸ்' ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அருமையான தொடக்கம் தந்தது.
 
சில ஓவர்கள் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 5-வது ஓவரில் சிக்சருடன் ரன் வேட்டையை ஆரம்பித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சிக்சருடன் அரைசதத்தை கடந்தார். சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வாலும் அரைசதத்தை எட்டினார். இந்தியாவுக்கு முதல் இன்னிங்சில் வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 139 ஆக உயர்ந்த போது பிரிந்தது.
 
74 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் அவுட்டானார். சுப்மான் கில் 10 ரன்களில் வெளியேற சதத்தை நெருங்கிய கேப்டன் ரோகித்தும் 80 ரன்களில் வெளியேறினார்.
 
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
2-வது நாள் ஆட்டம் தொடங்கியது முதலே விராட் கோலி - ஜடேஜா ஜோடி விக்கெட்டுகளை தற்காத்துக் கொண்டதுடன் ரன்களைவும் தொடர்ந்து குவித்த வண்ணம் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.
 
சிறப்பாக ஆடிய விராட் கோலி 180-வது பந்தில் பவுண்டரி அடித்து சதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் 29வது சதம் ஆகும். இதன் மூலம் 500 வது சர்வதேச போட்டியில் சதம் அடித்துவீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அத்துடன், சதங்கள் எண்ணிக்கையில், டெஸ்டில் 99.96 சராசரி வைத்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் இணைந்துள்ளார்.
 
 
இந்திய அணியைப் பொருத்தவரை சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சின் தோனி ஆகியோர் மட்டுமே 500 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். அதே நேரத்தில் 500வது போட்டியில் விளையாடும் விராத் கோலி, ரன்கள், சதம், சராசரி, ஸ்ரைக் ரேட் ஆகிய அனைத்திலும் தனது முன்னோடியான சச்சினை விட முன்னணியில் இருக்கிறார்.
 
டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாள் முன்பு கோலி பயிற்சிக்கு வரவில்லை, ஆனால் அதற்கு முந்தைய நாளே அவர் வியர்த்துவிட்டார். அவர் பெரிய ரன்கள் குவிப்பதில் தடுமாறிவந்தது குறித்து ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசப்படுவது குறித்து அவர் உணர்ந்துள்ளார். சமீப நாட்களாக கோலி பயிற்சியின் போது ராகுல் டிராவிட்டுடன் மட்டுமே பேசுகிறார். பயிற்சியாளருடன் கூட, அவர் அடிக்கடி சிரிப்பதையும் கேலி செய்வதையும் காணலாம்.
 
ஆனால் மேற்கிந்தியத் தீவுகளில் தற்போது அவரின் உடல்மொழியில் இது போன்ற விஷயங்களின் சிறிய அழுத்தம் கூட தெரிவதில்லை.
 
வழக்கமான வர்ணனையாளராக இல்லாமல், இந்த போட்டியை பார்ப்பதற்கு சிறப்பு அழைப்பாளராக சுனில் கவாஸ்கர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த மைதானத்தில் சுனில் கவாஸ்கர் 4 சதங்களை அடித்துள்ளார். இந்த மைதானத்திற்கோ, மைதானம் அமைந்துள்ள நகருக்கோ வந்து கிரிக்கெட் பற்றி யாரிடமாவது பேசினால், சுனில் கவாஸ்கர் பற்றி கேட்காமல் அவர்கள் பேச்சை தொடங்க மாட்டார்கள்.
 
போர்ட் ஆஃப் ஸ்பெயின் கவாஸ்கருக்கு கிடைக்கும் புகழும் மரியாதையும் மும்பையில் உள்ளவர்கள் கூட கொடுத்து இருக்க மாட்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்