கோலி, ரோஹித் சிறப்பான ஆட்டம்.. முதல் நாளில் இந்திய அணி நிதானம்!

வெள்ளி, 21 ஜூலை 2023 (07:09 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாளில் முடித்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 139 ரன்கள் சேர்க்க, ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த கில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவும் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய கோலி, ரஹானே ஜோடியில் ரஹானே 8 ரன்களில் நடையைக் கட்டினார். அதன் பின்னர் வந்த ஜடேஜா கோலியோடு இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இருவரும் சிறப்பாக விளையாட கோலி தன்னுடைய 30 ஆவது அரைசதத்தை அடித்தார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. கோலி 87 ரன்களோடும், ஜடேஜா 36 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்