அவரோடு விளையாடுவது பாக்கியம்… நெகிழ்ச்சியாக பேசிய ஜெய்ஸ்வால்!

வெள்ளி, 21 ஜூலை 2023 (14:39 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாளில் முடித்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் 171 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அவுட் ஆனார் ஜெய்ஸ்வால். தான் அவுட் ஆனவிதம் ஏமாற்றம் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் “விராட் கோலியுடன் இணைந்து விளையாடுவது மிகப்பெரிய பாக்கியம்.  அவரைப் போன்ற சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது என்னுடைய எதிர்கால கேரியருக்கு பயன்படும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் இரண்டாவது டெஸ்ட்டில் சீக்கிரமாகவே அவுட் ஆகியுள்ளது குறித்து “நான் எப்போது களமிறங்கினாலும், என்னால் முடிந்த அளவுக்கு நீண்ட நேரம் விளையாட வேண்டும் என ஆசைப்படுவேன். இம்முறை சதமடிக்க முடியாததால் வருத்தமடைந்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்