ரஜினி ரசிகர் vs சீமான் தொண்டர்கள் – அரிவாள் வெட்டால் ஒருவர் படுகாயம்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (17:00 IST)
ரஜினி ரசிகர் ஒருவருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் இடையில் சமூக வலைதளங்களில் நடந்த மோதல் அரிவாள் வெட்டு வரை சென்றுள்ளது.

சேலம் இரும்பாலை அம்மன் தியேட்டர் பகுதியில் வசித்து வருவபர் பழனி. இவர் சில ஆண்டுகளாக ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பில் இணைந்து சேவையாற்றி வருகிறார். சிறுவயது முதலே தீவிர ரஜினி ரசிகராக இருந்து வந்துள்ள பழனி தன் பேர் முன்பு ரஜினியை இணைத்துக்கொண்டு ரஜினி பழனியாக மாறியுள்ளார்.

ரஜினி வெறியரான இவர் ரஜினியை அடிக்கடி விமர்சிக்கும் சீமானை சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்..இதனால் சீமான் தொண்டர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்களிடம் இருந்து சமூக வலைதளங்களிலும், செல்போன் மூலமும் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. ஆனாலும் அஞ்சாத பழனி மீண்டும் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதனால் கோபமடைந்த சீமான் தொண்டர்கள் இவரை இன்று காலை பழனியை ஓட ஓடத் துரத்தி அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய ரஜினி பழனி சாக்கடைக்குள் சென்று ஒளிந்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி பழனி உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரை சந்தித்த ரஜினி மன்ற நிர்வாகிகள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள நாம் தமிழர் கட்சியினர் ‘ரஜினி பழனி தொடர்ந்து எங்கள் தலைவரை தவறாக விமர்சித்து வந்தார். அதற்காக அவர் மீது நாங்கள் போலிஸில் புகார் அளித்திருந்தோம். தலைமறைவாக இருந்து வந்த அவர் இப்போது விளம்பரத்துக்காக இது மாதிரி செய்திருக்கிறார்’ எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்