போர்நிறுத்தம் முடிந்து இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் மீண்டும் துவக்கம்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (21:26 IST)
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏழு நாட்கள் அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முடிந்து இன்று (வெள்ளி, டிசம்பர் 1) மீண்டும் போர் துவங்கியிருக்கிறது.
 
தெற்கு காஸாவிலிருந்து மக்களை வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை வீசியிருக்கிறது.
 
போர்நிறுத்தம் முறியடிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய ராணுவம் மற்றும் ஹமாஸ் இருதரப்பும் பரஸ்பரக் குற்றம் சாட்டிக்கொள்கின்றன.
 
ஹமாஸின் சுகாதார அமைச்சகம், வெள்ளிக்கிழமை 32 மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது.
 
அதேசமயம் காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருக்கின்றன.
 
ஹமாஸின் சுகாதார அமைச்சகம், வெள்ளிக்கிழமை 32 மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது
 
வெள்ளிக்கிழமை எக்ஸ் சமூக வலைதளத்தில் இடப்பட்ட ஒரு பதிவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவில் மீண்டும் போரைத் துவங்குவதாகத் தெரிவித்திருந்தது.
 
அப்பதிவில், ஹமாஸ் போர்நிறுத்த உடன்பாட்டை மீறிவிட்டதாகவும் அதனால் போர் மீண்டும் துவங்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது.
 
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் மெலதிக பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்ளவில்லை எனவும், அது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகவும் தெரிவித்தார். “ஹமாஸ் அனைத்து பெண் பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை, மேலும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது,” என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.
 
இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸ் ஒப்புக்கொண்டபடி அனைத்து பெண் மற்றும் குழந்தைப் பணயக்கைதிகளை விடுவிக்கவில்லை என்று கூறியிருக்கிறது.
 
இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து காஸாவிலிருந்து வெளியேறும் பாலத்தீனர்கள்
அதே சமயம், பொர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு நெருக்கமாக இருந்த ஒருவர், பிபிசியிடம், இஸ்ரேல் வடக்கு காஸாவிற்கு வரும் எரிபொருளை முடக்கியதுதான் போர்நிறுத்தம் முறிந்ததற்குக் காரணம் என்று ஹமாஸ் கூறியதாகத் தெரிவித்தார்.
 
மேலும், ஹமாஸ் பணயக்கைதிகளாகப் பிடித்த இஸ்ரேலிய ஆண்களை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடன்பாட்டின்படி விடுவிக்க மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
 
உணவு, தண்ணீர், மற்றும் மருந்துப் பொருட்களுக்கான கடுமையான பற்றாக்குறை ஏற்பட வய்ப்புள்ளது
 
போர் மீண்டும் துவங்கப்பட்டது காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை மீண்டும் மோசமாக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
 
உணவு, தண்ணீர், மற்றும் மருந்துப் பொருட்களுக்கான கடுமையான பற்றாக்குறை ஏற்பப்ட வய்ப்புள்ளது.
 
ஏழு நாள் இடைக்காலப் போர்நிறுத்ததால், காஸாவுக்குள் உதவிகளை எடுத்துச் செல்லும் டிரக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தது. ஆனால் காஸாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை என்று ஐ.நா. கூறியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்