நம்ம தகுதிக்கு மீறின பொண்ணை பார்த்தாலே பிரச்சனை தான்: அசோக்செல்வனின் ‘சபாநாயகன்’ டிரைலர்..!

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (18:24 IST)
அசோக்செல்வன் நடிப்பில் உருவான ‘சபாநாயகன்’ என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
கல்லூரியில் படிக்கும் அசோக் செல்வனுக்கு காதல் செட்டாகாத நிலையில் திடீரென இரண்டு பெண்களிடையே அவருக்கு காதல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளை கலகலப்பாக இயக்குனர் கூறி இருக்கும் படம்தான் ‘சபாநாயகன்’ 
 
இந்த படம்  அசோக்செல்வனின் திருமணத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் அவருக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, மயில்சாமி  உள்ளிட்ட  பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திகேயன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்,.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்