ஹவாயில் உள்ள மலை ஒன்றில் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பூர்வகுடி ஹவாய் மக்கள் போராடி வருகின்றனர்.
முப்பது மீட்டர் தொலைநோக்கி அமைக்கும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாக இந்த தொலைநோக்கி இருக்கும்.
மவுனா கியா மலை தாங்கள் புனிதமாக கருதும் இடம் என்று கூறும் பூர்வகுடிகள், அந்த மலையில் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது சூழலியல் சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.