பால்வினை நோய்த் தொற்று: 10 லட்சம் பேர் பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம்

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (07:38 IST)
உலகில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு புதிதாக பால்வினை நோய்த் தொற்று ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
கோனோரியா, சிபிலிஸ், ச்லாமைதியா, ட்ரைகோமோனியாசிஸ் போன்ற பாலுறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2012 முதல் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஒருவகை கோனோரியா நோய் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை என்பதே சமீபத்திய கவலைகளுக்கு காரணம்.

 
பால்வினை நோய்த் தொற்றுகளால், குழந்தை இறந்தே பிறப்பது, குழந்தையின்மை, நரம்பியல் நோய்கள், இதய நோய் போன்றவை ஏற்படுவதுடன், எச்.ஐ.வி. தொற்றுக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
 
சிகிச்சை பெறுவது, ஆணுறை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு வழிகளை மேற்கொள்வது அவசியம் என்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்