2400 ஆண்டுகளாக கடலுக்கடியில் இருந்த கிரேக்க வர்த்தகக் கப்பல்

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (09:24 IST)

பல்கேரியாவின் கடல் எல்லைக்குள் 2400 ஆண்டுகள் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

23 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சிதிலமைடையாமல் நல்ல நிலையில் இருப்பதாக இதைக் கருங்கடலில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலின் மேற்பரப்பில் இருந்து 2000 மீட்டர் ஆழத்தில் ஆக்சிஜன் அதிகம் இல்லாத பகுதியில் இருந்ததால் இது சிதிலமைடையாமல் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்களின் எச்சங்களில், சிதிலமைடையாமல் இருப்பவற்றில் இந்தக் கப்பல்தான் மிகவும் பழையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்