காவிரி, அமராவதி ஆறுகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் - கரூரில் ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 12 அக்டோபர் 2018 (17:58 IST)
காவிரி மற்று அமராவதி ஆறுகளில் மழைகாலங்களில் கடலில் வீனாக கலக்கும் உபரி நீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து ஏரி , குளம் , குட்டைகளுக்கு நீர் நிரப்ப கோரி மாநில அரசை வலியுறுத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக கரூரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

 
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் மாநில அரசை வலியுறுத்தி காவிரி மற்று அமராவதி ஆறுகளில் மழைகாலங்களில் கடலில் வீனாக கலக்கும் உபரி நீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து ஏரி, குளம் , குட்டைகளுக்கு நீர் நிரப்ப கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. 
 
அத ஒரு பகுதியாக கரூர் , திண்டுக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கரூர் தாலுக்கா அலுவகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்
 
பேட்டி - . தேவராஜன் -  மாநில தலைவர், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை 
 
-சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்