ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய உதவும் குறிப்புகள் !!

புதன், 4 மே 2022 (11:24 IST)
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தாமதம் ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு மாதவிடாய் சரிவர நடைப்பெறுவதில்லை.


பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொண்டிருகிறார்கள் என்றால் அதற்கு நம் உணவிலும் உடலிலும் பல காரணங்கள் உள்ளன. அதற்கு பெண்கள் ஆரோகியமான முறையான ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

அன்னாசி பழம் மாதத்திற்கு நான்கு முறை அல்லது ஐந்து முறை இரண்டு துண்டுகள் என உண்டுவந்தால் சரியான முறையில் மாதவிடாய் நடைபெறும்.

மஞ்சள் என்பது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும். அதனால் பெண்கள் தங்களின் உணவில் மஞ்சள் சேர்க்க பல வழிகள் உள்ளன. நீங்கள் அதை கறி, அரிசி அல்லது காய்கறி உணவுகளில் சேர்க்கலாம்.

பாதாம், முத்திரி போன்ற நட்ஸ் வகைகளை பெண்கள் எடுத்துக்கொள்வது அவசியம். பெண்கள் இஞ்சியை தினமும் சிறிதளவு பயன்படுத்துவது மாதவிடாயினை தூண்டுவதற்கான ஒரு பாரம்பரிய தீர்வாகும்.

பெண்கள் சூடான நீரில் குளிக்கும்போது இறுக்கமான தசைகளை தளர்த்துவதற்கும் உணர்ச்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும்.  மாதவிடாயை தூண்டுவதற்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்