முருங்கைக்காயில் உள்ள பயனுள்ள மருத்துவ குணங்கள் !!

புதன், 27 ஏப்ரல் 2022 (12:22 IST)
முருங்கைக்காய் மிகவும் சத்துள்ளதாகும். உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகள் எல்லாமே ஓரளவிற்கு சம அளவில் கலந்து இருக்கின்றன.


முருங்கைக் காயை உணவில் எப்படிப் பயன்படுத்திக் கொண்டாலும் அதனால் வாதம் முதலிய நோய்களையும், கபத்தையும் போக்கும்; தாது விருத்தியாகும்.

இது உடலுக்கு வலிமையையும், பொலிவையும் கொடுக்கிறது. குடல் சம்பந்தமான கோளாறுகளையும் சரி செய்கிறது. வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

வாய்ப்புண்ணை போக்குகிறது. இரத்தத்தைச் சுத்திக்கரிக்கிறது. பொதுவாக முருங்கைக் காயில் பயனுள்ள மருத்துவக் குணங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன.

முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கையில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3, பி6, ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்