மாதவிடாய் தள்ளிப்போவதால் இப்படியெல்லாம் நடக்குமா??

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:05 IST)
சீரற்ற மாதவிடாய் பிரச்சனையால் பெண்களுக்கு இதயகோளாறு மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படக்கூடுமாம்.


பெண்களின் உணவு பழக்கம், தூக்க நேரம் ஆகியவற்றி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதிலும் இதனால் இதயகோளாறு, சர்க்கரை நோய் ஆகியவையும் ஏற்படக்கூடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மாதவிடாய் காரணமாக ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்படும். இதன் காரணமாக பிசிஓஎஸ் எனும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்கும். இதுவே பெண்களுக்கு இதய கோளாறு ஏற்பட காரணமாகிறது.

உடல் பருமன் அதிகரிப்பதாலும் வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேரும் என்பதாலும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் உண்டவதற்கான வாய்ப்புகள் இருமடங்கு அதிகமாகவே காணப்படுகிறது.

நீர்க்கட்டி இருக்கும் பல பெண்கள் 40 வயதுக்குள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு ஆண் ஹார்மோனாகிய ஆண்ட்ரோஜன் அதிக அளவில் சுரக்கக்கூடும்.

அதிகப்படியான் இன்சுலின் எதிர்ப்பு பண்பால் ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரை அரவு சீராக பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மாதவிடாய் சிக்கலை சரிசெய்ய உடற்பயிற்சி, நல்ல உணவு ஆகியவற்றை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்