இரட்டை இலை கிடைத்தவுடன் அதிமுகவில் மாற்றம் வரும்: மா.பா.பாண்டியராஜன்

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (19:51 IST)
அதிமுகவில் தற்போது கட்சியின் தலைமைப்பொறுப்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அவர்களும், ஆட்சியின் தலைமைப்பொறுப்பாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் அவர்களும் இருந்து வரும் நிலையில் இரட்டை இலை கிடைத்தவுடன் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறியுள்ளார்


 


செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'இரட்டை இலை கிடைத்தவுடன் கட்சியின் தலைமை பொறுப்பை முழு அளவில் ஓபிஎஸ் அவர்களும், ஆட்சியின் தலைமை பொறுப்பை முழு அளவில் ஈபிஎஸ் அவர்களும் ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

அதிமுகவை பொறுத்தவரையில் இரட்டை தலைமை என்பதை விட ஒற்றை தலைமையே கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று தான் நினைப்பதாக அவர் மேலும் கூறினார். மா.பா.பாண்டியராஜனின் இந்த கருத்தால் ஈபிஎஸ் தரப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்