இரட்டை இலை விசாரணை: மீண்டும் ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்

புதன், 1 நவம்பர் 2017 (18:23 IST)
இரட்டை இலை யாருக்கு என்பது குறித்த விசாரணை கடந்த திங்கட்கிழமையே முடிவடைந்து இரட்டை இலை யாருக்கு என்பது தெரிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில் தினகரன் தரப்பினர் கேட்டு கொண்டதற்கு இணங்க நவம்பர் 1ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் மீண்டும் இதுகுறித்த விசாரணை இன்று தொடங்கியது. இன்றைய விசாரணையில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லி கொண்டிருந்ததால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எரிச்சல் அடைந்ததாக கூறப்படுகிறாது.  அதிமுகவில் இருந்து எடப்பாடி தரப்பினர்தான் நீக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். அன்றைக்காவது இந்த விசாரணை முடிவுக்கு வருமா? என்பதே கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்