ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (07:01 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி தள்ளிப்போய் கொண்டே இருக்கும் நிலையில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வரும் 26ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



 
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே உள்ளாட்சி  அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் சுமார் ஒரு ஆண்டு காலமாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக தனி அதிகாரிகள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று நேற்று சென்னை ஐகோர்ட்டில் வந்தது. அப்போது ஐகோர்ட் ஆகஸ்ட் மாதத்திற்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஒரு மாத காலத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்