சபைக்கு வெளியே உள்ள வீரம் உள்ளே இல்லாதது ஏன்? ஸ்டாலினுக்கு கேள்வி

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (05:51 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ரகசிய கூட்டு வைத்திருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய போது குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.



 
 
இதற்கு ஒரு உதாரணமாக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க ஆக்ரோஷமாக எதிர்ப்பு தெரிவிக்கும் என்றே அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால், தி.மு.க எந்தவித நெருக்கடியையும் கொடுக்காததால், எடப்பாடி அமைச்சரவை அனைத்து மானியக் கோரிக்கைகளையும் சுமுகமாக நிறைவேற்றிவிட்டது
 
ஆட்டம்கண்டு வரும் ஆளும்கட்சிக்கு எதிராக அவையில் ஆக்ரோஷம் காட்ட வேண்டிய தி.மு.க, இப்படி இணங்கிப்போவது ஏன் என்ற கேள்வி தி.மு.க-வின் சில முன்னணி தலைவர்களுக்கே புரியாத மர்மமாக உள்ளதாக கூறப்படுகிறது. 10 நாட்கள் நாங்கள் தினமும் வெளிநடப்பு செய்துள்ளோமே’ என்று தி.மு.க-வினர் சமாளித்தாலும், சபைக்கு வெளியே அவர்கள் காட்டும் ஆக்ரோஷம், சபைக்குள் ஏன் இல்லை என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்துள்ளது.
 
அதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் அவர்கள் 7பேரையும் மன்னித்துவிட்டதாக கூறியது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.
 
அடுத்த கட்டுரையில்