பரபரப்பான சூழலில் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் எச்.ராஜா

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (12:07 IST)
தமிழகத்தில் சாரணர் சாரணியர் இயக்கத்தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளதை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியனார். இந்நிலையில் எச்.ராஜா மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார்.


 

 
பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவை சாரணர், சாரணியர் இயக்கத்தலைவராக அதிமுக அரசு நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழகத்தில் காவி கொள்கையை புகுத்தும் செயல் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு எச்.ராஜாவை நியமிக்கும் செய்தி நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் உள்ளத்தில் நஞ்சை விதைக்க திரைமறைவில் முயற்சி நடக்கிறது என்று கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாஜக பதவியை பெறவே அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது அம்பலமாகியுள்ளது. ஊழல் அதிமுக அரசின் கொள்ளையில் நாங்களும் பங்குதாரர்கள் என்று பாஜக ஒப்புக்கொள்ளலாம் என்று கடுமையான சாடினார். இந்நிலையில் எச்.ராஜா திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார். இந்த தகவல் தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்