காரை சற்றுதள்ளி நிறுத்த கூறிய முதியவரை சுட்டு தள்ளிய பெண்

வியாழன், 14 செப்டம்பர் 2017 (11:45 IST)
அமெரிக்காவில் காரை சற்றுதள்ளி நிறுத்த கூறிய முதியவரை துப்பாக்கியால் சுட்ட பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 


 

 
அமெரிக்காவின் நாஷ்வில்லேவை சேர்ந்த ஜேரால்டு மெல்டன்(54) என்பவர் சாலையோரத்தில் வசிப்பவர். கடந்த மாதம் 26ஆம் தேதி முதியவர் படுத்திருந்த இடத்தில் அதிகாலை பெண் ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். காரின் எஞ்சின் மற்றும் காரில் ஓடி கொண்டிருந்த பாட்டு சத்தம் அவரது தூக்கத்தை கெடுத்தது. 
 
அவர் மட்டுமல்லாமல் அவரை போன்று நிறைய பேர் அங்கு உறக்கத்தில் இருந்தனர். இதனால் அநத முதியவர் எழுந்து சென்று காரை சற்று தள்ளி நிறுத்துமாறு காரில் இருந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் அந்த முதியவருக்கு காரில் வந்த பெண்ணுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்ய முடியாமல் முதியவர் திரும்ப சென்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பெண் காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த முதியவரை சுட்டார். இதில் முதியவர் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
 
இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கடந்த திங்கட்கிழமை அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருக்கு ரூ.2500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்