இலங்கை தமிழர்களுக்காக லைகா நிறுவனம் கட்டியுள்ள 150 வீடுகளை திறந்து வைக்க வரும் ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்ல ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்வது உகந்தது அல்ல என்றும் கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்
இதற்கு பதில் கூறியுள்ள பாஜக, நாடாளுமன்ற குழுக்களுடன் திருமாவளவன் இலங்கைக்கு சென்றால் அது சரி, ரஜினிகாந்த் இலங்கைக்கு சென்றால் அது தவறா? இலங்கை தமிழர்களை நேரில் சந்திக்காமல் இங்கிருந்தே போராடி கொண்டிருக்கும் தலைவர்கள் இலங்கைக்கு நேரடியாக சென்று அங்குள்ள தமிழர்களை நேரில் சந்திக்காத தலைவர்கள் ரஜினி இலங்கைக்கு செல்வது குறித்து வாயே திறக்க கூடாது என்றும் பாஜகவின் இரா. ஸ்ரீநிவாசன் நேற்றைய தொலைக்காட்சி ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.