முதல் ஆளாக சசிகலாவிற்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய திருமா....

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (17:29 IST)
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவிற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்து அங்கிருந்த கோப்புகளில் கையெழுத்து இட்டு தனது பதவியை ஏற்றுக் கொண்டார். மேலும், அதன் பின் அவர் கண்ணீர் மல்க உரையாற்றினார்.
 
இந்நிலையி, விசிக திருமாவளவன் போயஸ் கார்டன் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது “அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்ட சசிகலாவிற்கு வாழ்த்துக்களை கூறினேன். பெண்ணுரிமைக்கான இயக்கமான விடுதலை சிறுத்தை கட்சி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஜெ.விற்கு பின் துணிந்து பொதுச்செயலாளர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டதற்கு நான் வரவேற்கிறேன். இது பெண்ணுரிமைக்கான அடையாளம். இந்த சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்