பள்ளி மாணவர்களின் நலன்கருதி கவலை தெரிவித்த மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (11:50 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தாமல் இருப்பது கல்வித்துறையை பாழ்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசு மீது கவலை தெரிவித்துள்ளார்.


 

 
மத்திய அரசு உத்தரவின்படியும், கட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையிலும் ஆசிரியர் நியமனத்துக்காகவும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். 
 
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
 
தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாமல் இருக்கிறது. இதனால் வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்களின் வாழ்வை இருள் சூழ வைத்துள்ளது.
 
பள்ளிக் கல்வித் துறையில் 60 மாவட்ட கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 100-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதே அளவிலான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன்.
 
இது கல்வித் துறையை பாழ்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல்களாகும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   
அடுத்த கட்டுரையில்