சசிகலா நடராஜன் தரப்பை தைரியமாக எதிர்ப்பதாலே ஜெயலலிதா பொறுப்பளித்தார்: சசிகலா புஷ்பா

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (17:50 IST)
சசிகலா நடராஜன் தரப்பை தைரியமாக எதிர்க்கக் கூடியவர் என்பதாலே எனக்கு ஜெயலலிதா பொறுப்புகளை கொடுத்தார் என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.


 

 
சசிகலா நடராஜன் என்ற தனிநபர் மீது புகார் கூறினால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் பத்திரிகையில் என்னை கடுமையாக தாக்கி எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் என்னைப் பற்றி அவதூறாக சுவரொட்டி ஒட்டுகின்றனர்.
 
என் பிரச்சனையை வைத்து தென்மாவட்டத்தில் ஜாதிக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். என் மீது துரும்புபட்டாலும் எனக்கு எது நடந்தாலும் அதற்கு சசிகலா நடராஜனும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம்.
 
சசிகலா நடராஜன் தரப்பை தைரியமாக எதிர்க்கக் கூடியவர் என்பதாலே எனக்கு முதல்வர் ஜெயலலிதா பொறுப்புகளைக் கொடுத்தார். 
 
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
அடுத்த கட்டுரையில்