இங்கிலாந்து விசாவுக்காக திருமணம் செய்து கொண்டேன்: ரஜினி பட நாயகி

ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (10:22 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் அறியப் பட்டவர் ராதிகா ஆப்தே என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே தெலுங்கு இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார் என்பதும், மேலும் வெப்சீரிஸ்களிலும் இவர் படுக்கை அறை காட்சிகள் உள்பட படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு திருமணத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை என்றும் ஆனால் இங்கிலாந்து விசா கிடைக்கும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் 
 
லண்டனைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர் ஒருவரை காதலித்து வந்த ராதிகே ஆப்தே, அவருடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஆனால் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே இந்தியாவிலிருந்து அடிக்கடி லண்டன் சென்றுவர விசா கிடைக்கும் என்பதால் அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் தனது திருமணத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார் ராதிகா ஆப்தேவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்