முத்து படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இவரா? செம்மயா இருந்திருக்குமே!

வெள்ளி, 23 அக்டோபர் 2020 (11:06 IST)
முத்து படத்தில் சரத்பாபு நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர் இல்லையாம்.

ரஜினி நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் முத்து. மலையாளத்தில் மோகன் லால் மற்றும் நெடிமுடி வேணு ஆகியோர் நடிப்பில் வெளியான தென்மாவின் கொம்பத்து எனும் படத்தின் ரீமேக்தான் முத்து.

அந்த படத்தில் ரஜினிக்கு அடுத்த இரண்டாம் கதாநாயகனாக சர்தபாபு நடித்திருந்தார். ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர்கள் அரவிந்த்சாமியும், ஜெயராமும்தானாம். ஆனால் இருவருமே நடிக்க மறுத்ததால் அந்த கதாபாத்திரமும் சரத்பாபுவுக்கு சென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்